ADDED : மார் 07, 2024 11:40 AM
சென்னை:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கல்வி உதவித் தொகையுடன், தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பட்டயப் படிப்புக்கான விண்ணப்பத்தை, www.ulakaththamizh.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். சேர்க்கை கட்டணம் 3,200 ரூபாய். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு கிடையாது. விண்ணப்பிக்க ஏப்., 5 கடைசி நாள். எழுத்துத் தேர்வு ஏப்., 12ம் தேதி காலை 11:00 மணிக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்கும். வகுப்பு துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.
வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு நடக்கும். இப்படிப்பை படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த, ஆண்டுதோறும் 10 மாணவர்களுக்கு, மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை, தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

