ADDED : ஜன 01, 2025 10:22 PM
சென்னை:வரும் கல்வியாண்டில், புதிய தொழில் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில், 2025 - 26ம் கல்வியாண்டில், புதிய தொழில் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, புதிய தொழில் பிரிவுகள், கூடுதல் அலகுகள் துவக்கவும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகாரம் பெற ஒரு விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதும். விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழில் பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கும், ஒரு விண்ணப்பம் போதும்.
அனைத்து தொழில் பிரிவுகளுக்கும் சேர்த்து, 5,000 ரூபாய், ஆய்வு கட்டணம், 8,000 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க பிப்., 28 கடைசி நாள். மேலும் விபரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ள லாம் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.