ADDED : மார் 14, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக காங்கிரஸ் வார்ரூம் தலைவராக, மாநில பொதுச் செயலர் வசந்தராஜ் மற்றும் மூன்று இணை தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல், ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட சட்டசபை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் வார்ரூம் தலைவர் சசிகாந்த் செந்திலுடன் பணியாற்றிய அனுபவம் காரணமாக, தமிழக காங்கிரஸ் வார்ரூம் தலைவராக, மாநில பொதுச்செயலர் வசந்தராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவருடன் இணை தலைவர்களாக சுமதி அன்பரசு, பி.வி.சிவகுமார், கிருத்திகா பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
இதற்கான அறிவிப்பை டில்லி மேலிடம் பரிந்துரையுடன் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைவெளியிட்டுள்ளார்.

