ADDED : ஜூன் 24, 2025 11:55 PM
சென்னை:சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணை அதிகாரியாக, காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., -- டி.எஸ்.பி., வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காதல் ஜோடியை பிரிக்கும் விவகாரத்தில், 17 வயது சிறுவனை கடத்தியது தொடர்பாக, ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். அதேபோல, புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன் மூர்த்தியிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., ஜவஹர் மேற்பார்வையில், விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
விசாரணை அதிகாரியாக, காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், திருவள்ளூர் மாவட்ட, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர்.