ADDED : பிப் 23, 2024 03:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக நுண்ணறிவுப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக உள்ள மகேஷிற்கு கூடுதலாக பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜி பொறுப்பும்
சென்னை சி.ஐ.டி., எஸ்.பி., ஆக பணியாற்றி வரும் அருளரசுக்கு கூடுதலாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைமை அலுவலக எஸ்.பி., பொறுப்பும்
கோவை பயங்கரவாததடுப்பு எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் சசிமோகனுக்கு கூடுதலாக மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி., பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளார்.