ADDED : நவ 06, 2026 04:54 PM

-நமது நிருபர்-
கிரானைட் வீரமணி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது புகார் எழுந்துள்ளது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் மீது 7க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கணேசன், சாந்தி, வீரமணி வீட்டின் காவலாளி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறப்பு புலனாய்வுக்குழுவினர், சிபிசிஐடி போலீசாரும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கின்றனர்.
வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் முக்கிய போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம்பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந் நிலையில் வீரமணி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை சார்பில் ஆஜராக கே.ஆர். சங்கரன், எம். சந்தியா, சுவாமி சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
