ADDED : செப் 04, 2024 11:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சீமான் மீதான, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணை அதிகாரியாக, உதவி கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் ஒன்றை பாடினார்.
அதில், ஜாதி சார்ந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, சென்னை, பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஷ் என்பவர், மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தில் புகார் அளித்தார்.
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய, ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சீமான் மீது எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன் விசாரணை அதிகாரியாக, பட்டாபிராம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.