ADDED : பிப் 04, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வான, முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் உள்ளிட்ட 1,960 பேருக்கு, விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இதற்காக, முதுநிலை ஆசிரியர் காலியிட விபரங்களை இணையதளத்தில் பதிவேற்ற, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கு, வரும் 7,8 ம் தேதி கலந்தாய்வு நடக்க உள்ளது.

