தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
ADDED : மே 16, 2025 12:27 AM

சென்னை:திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், நாட்டின் பல்வேறு துறைகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பல்கலையில் நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் தலைவரும், பல்கலை வேந்தருமான சீனிவாசன், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பொறியியல் படிப்பை முடித்த, மாணவர் ஜஸ்வந்த் சுப்பிரமணியம், 12 வேலை வாய்ப்பு ஆணைகளையும், முதுகலை வணிக மேலாண்மை துறை மாணவி ஜெயஸ்ரீ, ஏழு வேலை வாய்ப்பு ஆணைகளையும் பெற்றனர். அவர்களுக்கு பல்கலை சார்பில், தலா 25,000 ரூபாய் ஊக்கத்தொகையை சீனிவாசன் வழங்கினார்.
பி.இ., மாணவர்கள் 92; வணிக மேலாண்மை துறை மாணவர்கள் 81; முதுகலை கணினி பயன்பாட்டு துறை மாணவர்கள் 94; மருந்தியல் டிப்ளமோ மாணவர்கள், 100 சதவீதமும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில், பல்கலை பதிவாளர் தனசேகரன் தேவராஜ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.