ADDED : நவ 11, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கோவை யில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.
ஜி.எஸ்.டி., 2.0 வரி சீர்திருத்தம் செய்தமைக்காக, நீலம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. கன்வென்ஷன் அரங்கில் இன்று மாலை 4:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, வணிகர் சங்க பேரவையினர் பாராட்டி கவுரவிக்கின்றனர்.
பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, கேரள வியாபாரி விவசாயி ஏகோபன சமிதி, கர்நாடக உணவு தானிய வர்த்தக சம்மேளனம், சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், புதுச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

