ADDED : ஆக 15, 2025 02:19 AM
சென்னை:'அமைச்சரவை கூட்டத்தில், 1937.76 கோடி ரூபாய் முதலீட்டில், பல தொழில் திட்டங்களுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 1937.76 ரூபாய் மொத்த முதலீட்டில், பல பெரிய தொழில் துறை திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி, இன்ஜினியரிங் வடிவமைப்பு, தொழில்நுட்ப ஜவுளி, புதுப்பிக்கத்தக்க மின் திட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 13,409 வேலைவாய்ப்புகள் உருவாகும். அமைச்சரவையில் பல முக்கிய திட்டங்களின் விரிவாக்க பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க 2024 செப்டம்பரில் அமெரிக்க சென்ற போது உயர் வேலைவாய்ப்பை உருவாக்க சென்னையில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் அதிநவீன மேம்பட்ட மையத்தை நிறுவ 'பேபால்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிறுவனம் மற்றும் 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' நிறுவனம் தொழில் துவங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.