ADDED : ஜூன் 28, 2025 03:39 AM
சென்னை : 'பயங்கரவாதிகளின் முகவர் என, தன்னை பற்றி அவதுாறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆற்காடு இளவரசரின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியின் இரண்டாவது மகன் குலாம் ஹவுஸ், 48; சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹாலில் வசித்து வருகிறார்.
இவர், சென்னை அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார்:
மதுரையைச் சேர்ந்த அஜ்மல் கான் என்பவர், தற்போது சென்னை மண்ணடியில் வசித்து வருகிறார். இவர், 'யு டியூப்' சேனல் ஒன்றுக்கு ஜூன் 23ல் பேட்டி அளித்துள்ளார்.
அதில், என்னை பயங்கரவாதிகளின் முகவர் என்று மிகவும் அவதுாறாகவும், கீழ்த்தரமாகவும் பேசி உள்ளார்.
அவரது செயல், மத உணர்வுகளை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அஜ்மல் கான் பேசிய வீடியோவை நீக்க வேண்டும். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.