குளத்திற்கு ஜெ., பெயர் வைத்தவர்கள் தி.மு.க., அரசை விமர்சிப்பதா?
குளத்திற்கு ஜெ., பெயர் வைத்தவர்கள் தி.மு.க., அரசை விமர்சிப்பதா?
ADDED : நவ 14, 2024 09:23 PM
அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைப்பதாக, தமிழக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் பதில் சொன்ன பின்பும், பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார். விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு குளம் கட்டினர். அந்தக் குளத்துக்கு 'அம்மா குளம்' என்று, ஜெயலலிதா பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.
கட்சித் தலைவியின் பெயரை குளத்துக்கு சூட்டி மகிழ்ந்த அ.தி.மு.க.,வினர் தான், கருணாநிதி பெயரை அரசு திட்டங்களுக்கு சூட்டுவது கண்டு பொங்குகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், நாகரிகமாக, அனைத்து தரப்பினரையும் மதித்து, கடந்த மூன்றாண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதனால், மக்கள் மத்தியில் அவருக்கு நற்பெயர் ஏற்பட்டிருக்கிறது. அது பொறுக்காமல், எதிர்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
பொன்முடி, தமிழக அமைச்சர்