ADDED : நவ 23, 2024 02:40 AM
கோவை:ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜாமின் மனு மீதான விசாரணை நவ.26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையம் குறித்து, நக்கீரன் இதழில் அவதுாறு பரப்பி வருவதாக கூறி, அதன் ஆசிரியர் கோபாலை கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி, நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மிரட்டல் விடுத்து பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. விசாரணைக்கு பிறகு, கோவை ஜே.எம்., 3 கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், அவரை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, நவ.26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

