ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 18, 2024 05:29 AM
சென்னை : தமிழகத்தில், 11 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், ராணுவத்திற்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ள வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான விபரங்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடலுார், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம்.
கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
அக்னி வீரர் பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் என, பல்வேறு பணிகளுக்கு, அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விருப்பம் உள்ளவர்கள், வரும் 22ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை, ஏப்., 22 முதல் வழங்கப்படும். சந்தேகங்களுக்கு 044 - 25674924 என்ற, தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என, ராணுவ ஆள் சேர்ப்பு முகமை தெரிவித்துஉள்ளது.