தீபாவளிக்கு 1100 தற்காலிக மதுக்கடை திறக்க ஏற்பாடு; சீமான் அதிர்ச்சி தகவல்
தீபாவளிக்கு 1100 தற்காலிக மதுக்கடை திறக்க ஏற்பாடு; சீமான் அதிர்ச்சி தகவல்
ADDED : அக் 20, 2024 02:28 AM
ஈரோடு:''தீபாவளிக்கு 1100 தற்காலிக மதுக்கடைகள் திறக்க ஏற்பாடு நடக்கிறது'' என சீமான் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அவர் அளித்த பேட்டி:
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல்லை எடுத்ததற்காக குதிக்கின்றனர். ஆனால், அதே தமிழ்த்தாய் வாழ்த்தில் 'ஆரியம் போல் வழக்கொழிந்து' என்ற வார்த்தையை நீக்கியது யார் என்பதை அவர்களே கூறட்டும்.
தமிழர்களை கொன்று குவித்தபோது வராத கோபம் இப்போது ஏன் வருகிறது என்பதை விளக்க வேண்டும்.
தென் மாநிலங்களில் ஐந்து மாநில கவர்னர்களை மாற்ற உள்ளனர். அதில் தமிழக கவர்னர் ரவியையும் மாற்ற உள்ளனர். இதை அறிந்து கொண்டு எங்கள் போராட்டத்தால் தான் மாற்றினர் என சொல்வதற்காக பிரச்னையை பெரிதாக்குகின்றனர்.
தமிழகத்தில் தீபாவளிக்காக தற்காலிகமாக 1100 மதுக்கடைகளை திறக்க உள்ளனர். இதையும் மறைக்க புதுப்புது பிரச்னையை கிளப்புகின்றனர். விஜய்க்கு மட்டுமல்ல நாங்கள் மாநாடு நடத்தினாலும் அதேபோல கட்டுப்பாடு இடையூறு தருவர். இவ்வாறு அவர் கூறினார்.