தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நீதிமன்றத்தில் போதையில் ரகளை செய்தவர் கைது

நீதிமன்றத்தில் போதையில் ரகளை செய்தவர் கைது

நீதிமன்றத்தில் போதையில் ரகளை செய்தவர் கைது


ADDED : பிப் 21, 2024 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் போதையில் ரகளை செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சாயல்குடி அருகே மாரியூரைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது 44. போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று காலை 10:30 மணிக்கு கடலாடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்தார்.

நீதிமன்றத்தில் நீதிபதி விஸ்வநாத் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது போதையில் இருந்த அப்துல் ஹமீது நீதிபதி முன்னிலையில் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். கடலாடி போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது அவர்களுடனும் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் அவரை போலீசார் கைது செய்து முதுகுளத்துார் கிளை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us