ADDED : பிப் 11, 2025 03:12 AM

பெரம்பலுார்: தன் மனைவி உட்பட பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து போட்டோ, வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், வெங்கலத்தைச் சேர்ந்தவர் சுமதி, 45. இவர், 7ம் தேதி வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்ததை கவனித்தார்.
வெளியே வந்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த மோகன்ராஜ், 29, அவ்வழியே சென்றதை பார்த்தார். அவர் மீது சந்தேகமடைந்த சுமதி, கணவர் ராஜாவிடம் இது குறித்து தெரிவித்தார்.
தொடர்ந்து, மோகன்ராஜை அழைத்து, அவரது போனை சுமதி பார்த்த போது, சுமதி, மோகன்ராஜ் மனைவி மோனிகா உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் குளிக்கும் போது எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்கள் இருந்தன. சுமதி அளித்த புகாரில், அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து, மோகன்ராஜை கைது செய்தனர்.

