தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சைபர் குற்றங்கள் நிகழ்த்த ஆள் அனுப்பியவர்கள் கைது

சைபர் குற்றங்கள் நிகழ்த்த ஆள் அனுப்பியவர்கள் கைது

சைபர் குற்றங்கள் நிகழ்த்த ஆள் அனுப்பியவர்கள் கைது


ADDED : ஜன 30, 2025 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:கோவையில் சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி, சைபர் கிரைம் குற்றம் புரிய வைத்த ஐந்து பேரை, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சட்டவிரோத ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, மியான்மர் நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் வெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி, சட்ட விரோத கும்பல் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி., சரகத்தில் பதிவு செய்யப்பட்ட, 3 சைபர் கிரைம் வழக்குகளில் சென்னையை சேர்ந்த பியோலியோ ராஜ், முகமது ேஷக் மீரான், சிவகங்கையை சேர்ந்த கவுதம், திருப்பூரை சேர்ந்த தாமோதரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜதுரை ஆகிய 5 சட்ட விரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இதுவரை, 18க்கும் மேற்பட்ட நபர்களை, தமிழ்நாட்டில் இருந்து லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளுக்கு, சைபர் குற்றம் புரிய சட்டவிரோதமாக அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us