sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லாமே அவரு விருப்பம்! எதுவுமே தெரியாது! டைவர்ஸ் குறித்து ஆர்த்தி ரவி வாய்ஸ்

/

எல்லாமே அவரு விருப்பம்! எதுவுமே தெரியாது! டைவர்ஸ் குறித்து ஆர்த்தி ரவி வாய்ஸ்

எல்லாமே அவரு விருப்பம்! எதுவுமே தெரியாது! டைவர்ஸ் குறித்து ஆர்த்தி ரவி வாய்ஸ்

எல்லாமே அவரு விருப்பம்! எதுவுமே தெரியாது! டைவர்ஸ் குறித்து ஆர்த்தி ரவி வாய்ஸ்

6


ADDED : செப் 11, 2024 11:07 AM

Google News

ADDED : செப் 11, 2024 11:07 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; ஜெயம் ரவியின் விவகாரத்து முடிவு முழுக்க, முழுக்க அவரின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்டது, குடும்ப நலனுக்கானது அல்ல என்று அவரது மனைவி ஆர்த்தி அதிரடியாக குற்றம்சாட்டி உள்ளார்.

காதல் திருமணம்


பிரபல நடிகரான ஜெயம் ரவி கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடக்க காலத்தில் இனிமையாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென பிரச்னை எழுந்தது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

விவாகரத்து


தொடக்கத்தில் அவை மறுக்கப்பட்டாலும் நேற்று முன்தினம் தமது மனைவியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி அதிகாரப்பூர்வ அறிவித்தார். நேற்று பிறந்த நாள், அதன் முந்தைய நாள் விவாகரத்து அறிவிப்பு என்று அவரின் வாழ்க்கை விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில் 3வது நாளாக இன்றும் பரபரப்பு தொற்றிக் கொண்டு உள்ளது.

அறிக்கை


விவகாரத்து முடிவு முழுக்க, முழுக்க ஜெயம் ரவியின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்டது. குடும்ப நலனுக்கானது அல்ல என்று அவரது மனைவி ஆர்த்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆர்த்தி ரவி கூறி இருப்பதாவது;

சொந்த முடிவு


விவாகரத்து குறித்து தன்னிச்சையாக ஜெயம் ரவி முடிவு செய்துள்ளார். எனக்கும், என் குழந்தைகளுக்கும் தெரியாமல் என்னை பிரிய அவர் முடிவு எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.

மனம் வேதனை


திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கையை கண்டு மனம் வேதனை அடைந்தேன். 18 வருட திருமண வாழ்க்கை இந்த அறிக்கையால் கண்ணியத்தையும், தனித்தன்மையையும் இழந்துவிட்டது.

தவிக்கிறோம்


திருமண பந்தத்தில் இருந்து பிரிவது என்பது முழுக்க, முழுக்க அவரது சொந்த விருப்பத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு. நானும் எனது 2 குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆழ்ந்த மனவேதனையில் உள்ள நான் இதுபற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க விரும்புகிறேன்.

பொய்கள் உண்மை


தாயாக என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமும் எனக்கு ரொம்ப முக்கியமானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களால் குழந்தைகள் காயப்படுத்தப்படுவதை அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் உண்மை என்று நம்பப்படும் என்பதால் இதை மறுக்க வேண்டியது எனது கடமையாகிறது.

இவ்வாறு ஆர்த்தி ரவி கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us