ADDED : டிச 31, 2024 09:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மின்னணு முறையில், சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி, வரும் 2ம் தேதி துவங்கி 4ம் தேதி வரை, சென்னை ஈக்காடுதாங்கல், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ., அலவலக சாலையில் நடக்கிறது.
இதில், ஏ.ஐ., முறையில் சந்தைப்படுத்துதல், எஸ்.இ.ஒ., முறை, விளம்பர பிரசார மேம்படுத்துதல் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். இதில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது.
கூடுதல் விபரங்களை, 86681 02600,70101 43022 என்ற எண்களிலும், www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.