ADDED : மார் 04, 2026 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆறு தனி தொகுதிகளை தேர்வு செய்து கொடுத்துள்ளோம்.
அதில் நான்கு தொகுதிகள் கொடுக்க வேண்டும் என, அழுத்தம் கொடுத்துள்ளோம். நான்கு தொகுதிகளை கொடுப்பர் என எதிர்பார்க்கிறோம்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே டீ குடித்துவிட்டு வெளியே வந்தவர்களை முகமூடி அணிந்து போதையில் வந்த கும்பல், சாலையில் சென்றோரை சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பதற்கு, இந்நிகழ்வும் ஒரு உதாரணம்.
தி.மு.க.,வுக்கு ஆதாரவாக இருக்கும் அரசு ஊழியர்களே, தற்போது எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். 5,000 ரூபாய் மட்டுமல்ல பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை.
ஜெகன் மூர்த்தி, தலைவர், புரட்சி பாரதம்

