/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளம்பெண் பலாத்காரம்; வாலிபருக்கு '20 ஆண்டு'
/
இளம்பெண் பலாத்காரம்; வாலிபருக்கு '20 ஆண்டு'
ADDED : மார் 04, 2026 07:01 AM

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் அருகேயுள்ள கிராமத்தில், 17 வயது இளம்பெண் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். 2024 ஜூன் மாதம், இளம்பெண், தன் தாயுடன் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண்ணின் வீட்டுக்குச் சென்றார்.
அங்கிருந்த அப்பெண்ணின் கணவர், மைக்கேல் ரீகன், 24, இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார்.
இது குறித்து இளம்பெண், காதலன் ஜெரின், 24, என்பவரிடம் கூறியுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிய ஜெரின், இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு மூணாறில் உள்ள தன் உறவினர் வீட்டுக்குச் சென்றார். வழியில் ஒரு கோவிலில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.
மேலும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இரண்டு நாளுக்கு பின் இருவரும் ஊர் திரும்பினர். வீட்டுக்கு வந்த இளம்பெண் தன் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தாய் காங்கயம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், இளம்பெண் ஏற்கனவே சிவகுமார், 24, என்பவருடன் நெருங்கிப் பழகியதும், அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. மூன்று பேரையும் போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி கோகிலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில், சிவகுமாருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 11,000 ரூபாய் அபராதம், மைக்கேல் ரீகன் மற்றும் ஜெரின் ஆகியோருக்கு தலா மூன்றாண்டு கடுங்காவல் சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

