/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை சனிப்பெயர்ச்சி கோவிலில் சிறப்பு யாகம்
/
நாளை சனிப்பெயர்ச்சி கோவிலில் சிறப்பு யாகம்
ADDED : மார் 05, 2026 02:42 AM
திருப்பூர்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நாளை (6ம் தேதி) விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு யாகபூஜைகள் நடைபெற உள்ளது.
நவக்கிரஹங்களில் மெதுவாக நகரும் சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
அதன்படி, வரும், 6ம் தேதி காலை, 8:24 மணிக்கு, கும்பராசியில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு யாகபூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செயல் அலுவலர் வனராஜா கூறுகையில், ''வரும், 6ம் தேதி (நாளை) காலை, 6:45 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை மற்றும் சிறப்பு யாக பூஜைகள் துவங்குகிறது.
தொடர்ந்து, சனி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜையும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. யாகபூஜையில் பங்கேற்கவும், சங்கல்ப அர்ச்சனை செய்து, பரிகாரம் செய்து கொள்ளவும், கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்,'' என்றார்.

