ADDED : ஜன 12, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டசபை, 6ம் தேதி கூடியது. நடப்பாண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால், கவர்னர் உரை நிகழ்த்துவார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக வந்த கவர்னர் ரவி, தேசிய கீதம் வாசிக்கப்படாததால், உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து, அந்த உரையை சபாநாயகர் படித்தார். பின்னர், அது தொடர்பான விவாதம், நேற்று முன்தினம் வரை நடந்தது. அதற்கு நேற்று முதல்வர் பதிலுரை வழங்கினார். இதன்பின், சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

