ADDED : பிப் 16, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின், வரும் 19ம் தேதி, சட்டசபை மீண்டும் கூட உள்ளது.
கடந்த, 12ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கிய தொடரில், இரண்டு நாட்களாக கவர்னர் உரை மீதான விவாதம் நடந்தது. விவாதத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
இன்று முதல் மூன்று நாட்கள் சட்டசபை கிடையாது. மீண்டும், 19ம் தேதி கூடுகிறது. அன்று 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.