தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/'கர்நாடகாவை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்'

'கர்நாடகாவை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்'

'கர்நாடகாவை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்'


ADDED : பிப் 17, 2024 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணை கட்டும் பணி துவங்கப்படும் என்று, கர்நாடக சட்டசபையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தடையை மீறி, மேகதாது அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை, கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

இதற்குப் பிறகும் கர்நாடகாவின் அத்துமீறல்களை, தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கை பார்க்கக்கூடாது.

சென்னை மாகாணம் -- மைசூர் சமஸ்தானம் இடையே, 1924ல் கையெழுத்தான காவிரிநீர் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகள் கட்ட முடியாது; உச்ச நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு துடிப்பதும், அதற்கு மத்திய நீர்வள அமைப்புகள் துணை போவதும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை.

கர்நாடக அரசைக் கண்டித்து, நடப்பு தமிழக சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us