அரசு ஊழியர்களின் சொத்துக்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல; ஐகோர்ட் திட்டவட்டம்
அரசு ஊழியர்களின் சொத்துக்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல; ஐகோர்ட் திட்டவட்டம்
ADDED : டிச 23, 2024 01:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல' என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் சொத்து விவரங்களை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிச.,23) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல. அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கும் தகவல்கள் பாதுகாக்கப்பட்டவை தான்.
ஆனால் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மனுவை மீண்டும் பரிசீலித்து 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க மாநில தகவல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.