போதை பொருள் கடத்தல்காரர்களின் ரூ.19.50 கோடி சொத்து முடக்கம்
போதை பொருள் கடத்தல்காரர்களின் ரூ.19.50 கோடி சொத்து முடக்கம்
ADDED : ஜன 09, 2025 11:01 PM
சென்னை:'போதை பொருள் கடத்தல்காரர்களின் நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் விதமாக, 80 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின், 19.50 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில போதை பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சிக்கிய நபர்கள் வாங்கிய சொத்துக்கள் மற்றும் அவர்களின் நிதி ஆதாரங்கள் குறித்து, ஆய்வு செய்யப்படுகிறது.
அந்த வகையில், 2022 - 24 வரை, போதை பொருள் வழக்கில் சிக்கிய நபர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 55 லட்சம் ரூபாய் இருப்பு இருந்த, 9,500 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், 80 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின், 48 வகையான, 19.50 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

