ஏத்தர் எனர்ஜி பங்கு விலை ரூ.304- - 321 ஆக நிர்ணயம்
ஏத்தர் எனர்ஜி பங்கு விலை ரூ.304- - 321 ஆக நிர்ணயம்
ADDED : ஏப் 23, 2025 11:43 PM

புதுடில்லி:புதிய பங்கு வெளியீடுக்கு வரும் மின்சார வாகன நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, அதன் பங்கு ஒன்றின் விலையை 304 -- 321 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட ஏத்தர் எனர்ஜி, ஐ.பி.ஓ., வாயிலாக 2,626 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது.
இதில், 927 கோடி ரூபாயை மஹாராஷ்டிராவில் புதிய ஆலை அமைக்கவும்; 750 கோடி ரூபாயை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், 300 கோடி ரூபாயை சந்தைப்படுத்தல் உத்திக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஐ.பி.ஓ.,வில் 75 சதவீத பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக் கும்; 15 சதவீதம் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும்; 10 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.
சில்லரை முதலீட்டாளர்கள், வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். மே 2ம் தேதி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மே 6ம் தேதி பங்குகள், சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.