விசிக நிர்வாகி தாக்குதல்:பெண் எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதி
விசிக நிர்வாகி தாக்குதல்:பெண் எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதி
ADDED : பிப் 05, 2025 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பிரணிதா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று இரவு காவல் நிலையத்தில் புகார் மனு தொடர்பாக சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலர் பெண் எஸ்ஐ இடம் வாக்குவாதம் செய்து தாக்கினர். இதில் காயமடைந்த எஸ்.ஐ., பிரணிதா காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி பெண் எஸ்.ஐ.,யை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.