ADDED : நவ 17, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மளிகைக் கடையில் இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், வண்டிமேடு, கே.வி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி மனைவி தமிழ்ச்செல்வி, 45; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை, தமிழ்ச்செல்வி மட்டும் கடையில் இருந்தார். அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், பிஸ்கெட் கேட்டபடி திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, தமிழ்ச்செல்வி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார்.
தமிழ்ச்செல்வி, கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் ஓடி வந்தபோது அந்த நபர் தப்பியோடினார். இதனால் நகை பறிபோகாமல் தப்பியது.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.