ADDED : ஏப் 22, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி இல்லாததால், அவர் கொடுத்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில், தரமான உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட வேண்டியது குறித்து விவாதிக்க, கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இதுகுறித்து பேச, வானதியை சபாநாயகர் அப்பாவு அழைத்தார். அப்போது, அவர் இருக்கையில் இல்லாததால், அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் துவங்கியது. அந்த விவாதம் நடந்தபோது, வானதி வந்து பங்கேற்றார்.