sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக பட்ஜெட் ஒன்றுமில்லை !

/

தமிழக பட்ஜெட் ஒன்றுமில்லை !

தமிழக பட்ஜெட் ஒன்றுமில்லை !

தமிழக பட்ஜெட் ஒன்றுமில்லை !


UPDATED : பிப் 19, 2024 12:43 PM

ADDED : பிப் 18, 2024 11:37 PM

Google News

UPDATED : பிப் 19, 2024 12:43 PM ADDED : பிப் 18, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக சட்டசபையில், 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக இலங்கியங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கப்படும், தொழில்நுட்ப தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கப்படும், அகழ்வராய்ச்சிக்கு நாட்டிலேய அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தேர்தல் நேரம் என்பதால் புதிய சலுகை அறிவிப்புகள் ஏதும் வரும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஆனால் கவரும் அறிவிப்புகள் ஏதுமில்லை.

பா.ஜ., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

இந்த பட்ஜெட்டில் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை, ஒவ்வொரு முறையும் அரசு வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறது. வருவாயை பெருக்க முடியாமல் மத்திய அரசின் மீது பழிபோடும் அறிக்கையாக பட்ஜெட் உள்ளது என பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார். மாநிலத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு நிதி வழங்கும், தமிழகத்தில் கடன் அதிகம் உள்ளது. இதன் காரணமாக பற்றாக்குறை பட்ஜெட் போடும் சூழல் உள்ளது. இது அரசின் நிர்வாக மேலான் திறனில் ஏற்பட்ட குறைபாடு என்றும் அவர் தெரிவித்தார்.



பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

உலகப் புத்தொழில் மாநாடு

* 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்.

* தமிழகத்தில் முதன்முறையாக உலகப் புத்தொழில் மாநாடு நடத்தப்படும்.

* ரூ.30 கோடியில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இலவச வை-பை.

* முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமைக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும்.

* 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடி மதிப்பில், கோவையில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

* கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

* பசுமை ஆற்றல் நிறுவனம் தோற்றுவிக்கப்படும்.

* தமிழகத்திற்கு 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும். 500 மின்சார பஸ்கள் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்.

* சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு.

* பிராட்வே பஸ் நிலையம் மேம்படுத்தப்படும். பழங்குடியினத்தவரை மேம்படுத்த ரூ. ஆயிரம் கோடியில் தொல்குடி திட்டம் அமல்படுத்தப்படும்.

* மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு.

* சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையும், கோயம்பேடு முதல் ஆவடி வரையும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை உருவாக்கப்படும்.

* சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் திட்டத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

கோயில் நிலங்கள் மீட்பு

* ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

* ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு.

* ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகளும் மீன் இறங்குதளங்களும் அமைக்கப்படும்.

* ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

* ரூ.20 கோடியில் கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம்.

* ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் உருவாக்கப்படும்.

* ரூ.50 கோடியில் புராதனக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

* கருணாநிதி பன்னாட்டு அரங்கம்', 3 லட்சம் சதுர அடியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்படும்.

* அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி. ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள்.

* தமிழக புதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும். அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தமிழக புதல்வன் திட்டம் உதவியாக இருக்கும்.

* மகளிர் உரிமை திட்டத்திற்கு 13,720 கோடி நிதி ஒதுக்கீடு.

* வானிலையை துல்லியமாக கணிக்க 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும்.

* பழங்குடியினர் மொழி வளங்களை ஆவணப்படுத்துதல் திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு.

ஊக்கத்தொகை

* சிந்துவெளிப் பண்பாடு நூற்றாண்டுக் (1924-2024) கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்.

* வேளாண் துறை, குறு, சிறு, நடுத்தரத் துறை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.8 லட்சம் கோடி.

* பழங்குடியின இளைஞர்கள் 1,000 பேருக்குத் திறன் பயிற்சி.

* 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.

* 27,000 தேயிலை சிறு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.9 கோடி ஒதுக்கீடு.

* 1,000 மாணவர்களுக்குக் குடிமைப்பணித் தேர்வுக்கான பயிற்சி.

* ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் நவீனத் தொழில்நுட்பங்கள் & தானியங்கி இயந்திரங்கள்.

தங்கு தடையின்றி உரையாற்றிய தங்கம் தென்னரசு

இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, உரை துவங்கியது முதல் முடியும் வரை எவ்வித தங்கு தடையின்றி வாசித்தார். ஒரு இடத்தில் கூட ஒரு வார்த்தை கூட சறுக்கவில்லை. வார்த்தைகள் உச்சரிப்பு மிக துல்லியமாக இருந்தது. இவரது உரையின்போது முதல்வர் முதல் அனைவரும் மிக அமைதியாக கேட்டு கொண்டிருந்தனர். யாரும் இடைச்சறுகல் செய்யவில்லை.
முக்கிய அறிவிப்பின்போது மட்டும் சில நேரங்களில் கைத்தட்டு எழுந்தது. கடந்த முறை நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாக ராஜன் தமிழ் உச்சரிப்புக்கு மிக சிரமப்பட்டார். முதன் முதலாக தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்தாலும் உரையில் எவ்வித திக்கும், திணறலும் இல்லை. சொல்லப்போனால் எக்ஸ்பிரஸ் ரயில் சீரான வேகத்தில் செல்வதாக இருந்தது. அமைச்சர் அவ்வப்போது திருக்குறளையும் மேற்கோள் காட்டி தழிழறிவு பெற்றவர் என்பதையும் காட்டி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார் என்றே கூறலாம்.



தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட தியாகராஜன், 2021 ஆகஸ்ட் 13ல், 2021 - 22ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு சட்டசபையில், முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் முதல் முறையாக, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலானது. 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின், கடந்த ஆண்டு மே மாதம், அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு, நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார்.

நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின், தன் முதல் பட்ஜெட்டாக, 2024 - 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, இன்று சட்டசபையில் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.






      Dinamalar
      Follow us