ADDED : ஜூலை 16, 2025 02:26 AM
ஈரோடு:ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதிகள், மணிக்கூண்டு சாலை, காந்திஜி சாலை, பனியன் மார்க்கெட் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.
தீபாவளிக்கு இன்னும், 95 நாட்களே உள்ளதால் இருப்பில் உள்ள ஜவுளிகளை குறைந்த விலையில் விற்றுத்தீர்க்கவும், ஆடித்தள்ளுபடி விற்பனை, தீபாவளிக்கு புதிய ஆடைகளை தருவித்து கொள்ளவும், நேற்றைய சந்தையில் தள்ளுபடி விற்பனை மும்முரமாக நடந்தது.கடைக்காரர்கள் கூறுகையில், 'தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் சில்லரை மற்றும் மொத்த ஜவுளிகளை வாங்கி சென்றனர். ஆடி தள்ளுபடி ரீதியில் மொத்த விற்பனை நடந்ததால், அதிகமாக இருப்பு உள்ள ஜவுளிகள், பழைய ஸ்டாக்குகள் குறைந்த விலையில் விற்கப்பட்டன. இன்னும், நான்கு வாரங்களுக்கு இதே போன்ற விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கிறோம். நேற்று மொத்த விற்பனை, 30 சதவீதம், சில்லரை விற்பனை, 30 முதல், 35 சதவீதம் வரை நடந்தது' என்றனர்.