உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 19, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக காங்., சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் தாம்பரம் நாராயணன் அறிக்கை:
நான் ஒரு ஆடியோ வெளி யிட்டதாகவும், அதில் 'மூன்று தொகுதிகளில் மட்டும், ராகுல் பிரசாரம் செய்தால், தி.மு.க.,வினர் எதிர் நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்களா? த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைத்திருக்க வேண்டும். இரண்டு கெட்டான் அரசியல் செய்யக் கூடாது' என கூறியதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
நான் எந்த ஆடியோவையும் வெளியிடவில்லை. தலைமையையும், கட்சியின் நிலைப்பாட்டையும் பொதுவெளியில் விமர்சிக்கும் பண்பு எனக்கில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
