ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; விரைவில் அறிவிக்கிறது அரசு
ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; விரைவில் அறிவிக்கிறது அரசு
ADDED : டிச 18, 2024 04:31 AM

சென்னை : தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.
இரவு நேரத்தில், இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. இது அமலுக்கு வந்து, 11 ஆண்டுகளாகி விட்டது. புதிய கட்டணம் நிர்ணயிக்க கோரி, ஆட்டோ தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, 'ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக, பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்களின் விபரங்களை சேகரித்துள்ளோம். புதிய கட்டண விபரத்தை, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில், புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும்' என்றனர்.