தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சரக்கு வாகனங்களாக ஆட்டோவை பயன்படுத்தினால் பறிமுதல்

 சரக்கு வாகனங்களாக ஆட்டோவை பயன்படுத்தினால் பறிமுதல்

 சரக்கு வாகனங்களாக ஆட்டோவை பயன்படுத்தினால் பறிமுதல்


ADDED : பிப் 18, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களை, வணிக பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தினால், பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள உத்தரவு: ரேபிடோ, ஊபர் மற்றும் போர்ட்டர் செயலிகளில், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில், சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களாக பயன்படுத்துவதாக, ஓட்டுநர்கள் சங்கங்கள் வாயிலாக புகார் பெறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், சோதனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திடீர் சோதனை நடத்தும் போது, சம்பந்தப்பட்ட செயலிகள் வாயிலாக இயக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், வாகன விபரங்களை, போக்குவரத்து ஆணையரக அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், 'ஊபர், ரேபிடோ, போர்ட்டர் செயலிகளில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில், சரக்குகளை எடுத்து செல்ல, பதிவு செய்யும் வசதியை நீக்க வேண்டும்' என, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா, நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us