ADDED : மார் 15, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊரக வளர்ச்சி, பட்டு வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு ஆகிய அனைத்து துறைகளையும் ஒன்றாக இணைத்து, அவியல், கூட்டு போல வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
தேங்காய், பருத்தி, சூரியகாந்தி உற்பத்தியில், தமிழகத்தை முதல் மூன்று இடத்திற்குள் கொண்டு வருவோம் என்று கூறினர். ஆனால், இந்த பயிர்களின் உற்பத்தித் திறன் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 79.06 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி, 2023- - 24ல் 70.48 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. சரிசெய்ய பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.
பழனிசாமி
அ.தி.மு.க., பொதுச்செயலர்.