ADDED : ஜூலை 09, 2023 01:02 AM

தமிழக பக்தர்கள் தங்கு வதற்காக, உத்தர பிரதேசமாநிலத்தில் உள்ள அயோத்தி, வாரணாசியில் புதிய தங்குமிடங்களை, ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கமிட்டி கட்டவுள்ளது.
ஹிந்துக்களின் புனித தலமான வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினருக்கு சொந்தமான சத்திரம் உள்ளது. 1813-ல் கட்டப்பட்ட இந்த சத்திரத்தில், 210 ஆண்டுகளாக, தமிழக பக்தர்கள் தங்கி, காசி விஸ்வநாதரை தரிசித்து செல்கின்றனர்.
தற்போது, இந்த சத்திரத்தில் ஒரே நேரத்தில், 620 பக்தர்கள் தங்கும் வசதி உள்ளது. இந்நிலையில், சிக்ரா என்ற பகுதியில், ஆக்கிரமிப்பில் இருந்த 240 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 2022ல் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மீட்டு கொடுத்துள்ளார்.
அங்கு, 100 அறைகளுடன், 10 மாடிகள் கொண்ட புதிய தங்குமிடம் கட்டப்படும் என, நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கமிட்டி தலைவர் லேனா நாராயணன், செயலர் கதிரேசன், துணை செயலர்கள் பழ.ராமநாதன், அண்ணாமலை ஆகியோர் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
