தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்

அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்

அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்


ADDED : மார் 04, 2024 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 07:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகர்கோவில், : அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்புக்கு அய்யாவழி பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் தலைமைபதி கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் அமைந்துள்ளது. அவரது அவதார தினம் மாசி 20- ல் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடந்தும், வாகனங்களிலும் நாகர்கோவில் நாகராஜாகோயில் திடலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தனர். இங்கு அய்யாவழி சமய மாநாடு, பூஜித குரு ராஜசேகர் தலைமையில் நடந்தது.

நேற்று காலை இங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு சுவாமிதோப்பு சென்றது.

அதில் மேளதாளம், சிறுமியரின் கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அய்யா வைகுண்டரின் அகிலதிரட்டு புத்தகத்தை பூபல்லக்கில் வைத்து பக்தர்கள் சுமந்து வந்தனர்.

விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் தலைப்பாகை கட்டி கலந்து கொண்டனர்.

சுவாமிதோப்பில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us