மோசமான சபாநாயகர் அப்பாவு பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கு
மோசமான சபாநாயகர் அப்பாவு பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கு
ADDED : ஜன 17, 2025 09:18 PM

திருப்பூர்:''தி.மு.க., ஆட்சியில் இதுவரை பார்த்த சபாநாயகர்களில், மிக மிக மோசமானவர் அப்பாவு,'' என, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
திருப்பூரில் அவர் அளித்த பேட்டி:
பொங்கல் பரிசு வாங்காமல் புறக்கணிக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த முதல்வரின் பேரன் இன்பநிதி மற்றும் அவருடைய நண்பர்களுக்காக, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, இருக்கையை காலி செய்துவிட்டு, ஓரமாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வேடிக்கை பார்க்கும் பசங்களுக்காக, கலெக்டரையே ஓரத்தில் நிற்க வைத்துவிட்டனர்; இது மக்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. இன்றைய சம்பவம் நாளைய சரித்திரம்; விரைவில், தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும். சபாநாயகர் செயல்பாடு மிக மோசமாக இருக்கிறது. தமிழகத்தில், இதுவரை பார்த்த சபாநாயகர்களிலேயே மிக மிக மோசமானவர் அப்பாவு. எழுதி கொடுக்கும் தீர்ப்பை வாசிக்கும், சபாநாயகரின் உத்யோகத்தை பார்த்து மக்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர்.
இவ்வாறு ஜெயராமன் கூறினார்.