ADDED : ஆக 26, 2011 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால முன்ஜாமின் வழங்கியது.
தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனுக்கு எதிராக, தி.நகர் போலீசில், நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, ஐகோர்ட்டில் அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு அவ்வப்போது விசாரணைக்கு வந்து, தள்ளிவைக்கப்பட்டு வந்தது. தற்போதைய நிலை நீடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இம்மனு நேற்று நீதிபதி சுதந்திரம் முன் விசாரணைக்கு வந்தது. அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜரானார். அன்பழகனுக்கு மூன்று வாரங்களுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி, நீதிபதி சுதந்திரம் உத்தரவிட்டார்.