ADDED : ஆக 16, 2025 08:10 PM
சென்னை:பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.யின், 592வது கூட்டம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது.
இந்த கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறையின் பாடத்திட்டங்களை, திறந்தநிலை, தொலை துாரம் மற்றும் ஆன்லைன் கல்வி முறையில் கற்றுக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி, உளவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆகிய, 'ஹெல்த் கேர்' படிப்புகளை, திறந்தநிலை, தொலைதுாரம் மற்றும் 'ஆன்லைன்' முறையில் கற்பிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, தேசிய கூட்டு மற்றும் சுகாதார சேவை சட்டத்தின்படி, வரும் 2025 - 26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக, யு.ஜி.சி. அறிவித்து உள்ளது.
நாட்டில் உள்ள எந்த ஒரு உயர் கல்வி நிறுவனமும், உளவியல் உட்பட, 'ஹெல்த் கேர்' தொடர்பான படிப்புகளை, திறந்த நிலை, தொலைதுாரம் மற்றும் ஆன்லைனில் கற்பிக்க கூடாது என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

