உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 14, 2026 07:33 PM
ADDED : அக் 14, 2026 07:09 PM
அ நிறம் | அளவு
சேலம்: தசரா பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரு – திருவனந்தபுரம் ரயில், நாளை மாலை, 4:40க்கு புறப்பட்டு, பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் வழியே, சனி காலை, 10:30 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். வெள்ளி இரவு, 10:20க்கு சேலம் வந்து செல்லும்.
மறுமார்க்க ரயில், வரும், 17 மதியம், 12:40 மணிக்கு கிளம்பி, ஞாயிறு காலை, 6:00 மணிக்கு பெங்களூருவை அடையும். சனி இரவு, 11:25க்கு சேலம் வந்து செல்லும். இந்த ரயில்களில், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி – 4, ஸ்லீப்பர் பெட்டி – 6, பொதுப்பெட்டி – 8 இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
