UPDATED : அக் 14, 2026 07:12 PM
ADDED : அக் 14, 2026 07:09 PM

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ – மாணவியருக்கான பொதுத்தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்துகிறது.
இந்நிலையில், 2026 – 27ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியீடு நிகழ்ச்சி, சென்னை, நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், அடுத்த ஆண்டு மார்ச் 17ல் தொடங்கி, ஏப்., 12ம் தேதி வரை நடக்கின்றன. பொதுத்தேர்வு முடிவுகள், அடுத்த ஆண்டு மே 20ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், அடுத்த ஆண்டு மார்ச் 3ல் தொடங்கி, 29ம் தேதி வரை நடக்கின்றன. செய்முறை தேர்வுகள், பிப்., 8 முதல் 18 வரை நடக்கின்றன. பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 ‘அரியர்’ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், அடுத்த ஆண்டு மே 7ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை
10ம் வகுப்பு
தேதி பாடம்
17.3.2027 தமிழ் மற்றும் இதர மொழி பாடங்கள்
25.3.2027 ஆங்கிலம்
31.3.2027 கணிதம்
5.4.2027 அறிவியல்
9.4.2027 சமூக அறிவியல்
12.4.2027 விருப்ப மொழிப்பாடம்
பிளஸ் 2 வகுப்பு
தேதி பாடம்
3.3.2027 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்
8.3.2027 ஆங்கிலம்
12.3.2027 வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல்
15.3.2027 கணினி அறிவியல், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், கணினி பயன்பாடு, இந்திய கலாசாரம் மற்றும் நெறிமுறைகள்
19.3.2027 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், ஜவுளி தொழில்நுட்பம்
23.3.2027 இயற்பியல், பொருளாதாரம்
29.3.2027 கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல், நர்சிங்
