ADDED : ஜூலை 11, 2026 02:10 AM

துாத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட அவர், 'எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.,வில் இணையுமாறு காவல்துறை அதிகாரிகள் பேரம் பேசினர்' என, குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக, விசாரணைக்கு நேரில் ஆஜராக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவருக்கு சம்மன் அனுப்பினர். தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆஜரானார்.
அவரிடம், இரண்டு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். வெளியே வந்த அவர் கூறுகையில், ''என்னை கைது செய்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வைத்திருந்த போது, இரண்டு பேர் வந்து த.வெ.க.,வில் இணையுமாறு கூறிய விபரத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன்.
''அடிக்கடி விசாரணைக்கு அழைப்பதால் பிரச்னை இல்லை. தி.மு.க.,காரன் எதற்கும் அஞ்ச மாட்டான்,'' என்றார்.
