உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 11, 2026 02:17 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 9,500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, நிறுவனங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதுடன், மின் வாரியத்திற்கும் விற்பனை செய்கி ன்றன.
இந்தாண்டு மே மாதம் தொடங்கிய காற்றாலை சீசன், வரும் செப்., வரை உள்ளது. இந்த சீசனில் காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், காற்றாலைகளில் தினமும் சராசரியாக, 3,000 - 4,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. கடந்த, 2024 ஜூலை 30ல், 5,899 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது.
இதுவே, மெகா வாட் அடிப்படையில் உச்ச அளவாக இருந்தது. நேற்று முன்தினம், காற்றாலைகளில் மின் உற்பத்தி, 6,000 மெகா வாட்டை தாண்டி, 6,013 மெகா வாட்டாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
