ADDED : ஜன 01, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ஆங்கிலப்புத்தாண்டையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடி ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தனி அம்மன் சன்னதிகளில் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நான்கு ரதவீதி, சன்னதி தெரு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேல வாசல் வரை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.

