பொறியியல் கல்லுாரிகளில் பி.பி.ஏ., - பி.சி.ஏ., தனியார் கல்லுாரிகள் சங்கம் ரிட் மனு தாக்கல்
பொறியியல் கல்லுாரிகளில் பி.பி.ஏ., - பி.சி.ஏ., தனியார் கல்லுாரிகள் சங்கம் ரிட் மனு தாக்கல்
ADDED : பிப் 01, 2024 02:40 AM
கோவை:உயர்கல்வித்துறையில், கலை அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்களையு.ஜி.சி., எனப்படும்பல்கலை மானியக்குழுவும், பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் அமைப்பும் கட்டுப்படுத்துகிறது.இந்நிலையில், தொழில்நுட்பம் சாராத பி.பி.ஏ., - பி.சி.ஏ., ஆகிய படிப்புகளை பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில் துவங்க ஏ.ஐ.சி.டி.இ., தரப்பில் அறிவிப்பு வெளியானது. மேலும், இப்படிப்புகளை தற்போது நடத்தி வரும் கலை அறிவியல் கல்லுாரிகளும் ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு, தொடர்பாக தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில் கடந்த டிச., மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி ஏ.ஐ.சி.டி.இ., பொறுப்பாளர்களுக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டன.
இந்நிலையில், கடந்த, ஜன., 29ம் தேதிஇந்த நடைமுறைக்கு எதிராக, தனியார் கல்லுாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பை திரும்பப்பெற்று ரத்து செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.